Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் 11 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு வெளியில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம்!

தமிழகத்தின் 11 மாவட்டங்களில் அடுத்து வரும் இரு தினங்களுக்கு வெயில் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, ” தமிழகத்தில் சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், வேலூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, கரூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்ஸியஸ் முதல் 42 டிகிரி செல்ஸியஸ் வரை பதிவாகக்கூடும்.

எனவே, அடுத்துவரும் இரு தினங்களுக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 03.30 மணி வரை திறந்த வெளியில் வேலை செய்வதை தவிர்க்குமாறு” அறிவுறுத்தியுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் தெளிவாக காணப்படும் என தெரிவித்துள்ளது. இன்று அதிகபட்ச வெப்பநிலையாக 40 டிகிரி செல்சியாசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியாசாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழைக்கு வாய்ப்பு:

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 -55 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அடுத்த 5 நாட்களுக்கு இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Categories

Tech |