கிரீஸில் ஒரு படகில் அகதிகள் அதிகமானோர், பயணித்த நிலையில் நடுக்கடலில் படகு கவிழ்ந்து 11 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிரீஸ் நாட்டில் அளவுக்கு அதிகமானோர் ஒரே படகில் பயணித்ததால், படகு கடலில் கவிழ்ந்தது. இதில், 11 பேர் பரிதாபமாக பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 90 நபர்களை கடலோர காவல் படையினர் மீட்டுள்ளனர்.
கடலில் கவிழ்ந்த அந்த படகிற்கு அடிப்பகுதியில் யாரும் மாட்டிக்கொண்டிருக்கிறார்களா? என்று மீட்புக்குழுவினர் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன்பின்பு, மீட்கப்பட்ட மக்களை அருகில் இருந்த தீவுப்பகுதியில் தங்க வைத்துள்ளனர். அதில் ஆண்கள் 52 பேர், பெண்கள் 11 பேர் மற்றும் குழந்தைகள் 27 பேர் இருக்கிறார்கள்.