Categories
தேசிய செய்திகள்

கோர விபத்து… நேருக்கு நேர் மோதிய ஜீப் – டிரக்… புது தம்பதியர் உட்பட 11 பேர் உடல் நசுங்கி பலி..!!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தில் பலோத்ரா-பலோடி நெடுஞ்சாலையில் டிரக் மற்றும் ஜீப் மோதியதில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயமடைந்தனர்

ராஜஸ்தான் மாநிலம், பார்மர் (Barmer) மாவட்டத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் சமீபத்தில் திருமணமான ஒரு தம்பதியருடன் இன்று ஒரு காரில் ஜோத்பூர் நகரின் அருகே இருக்கும்  பாபா ராம்டியோ ஆலயத்திற்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக சென்று கொண்டிருந்தனர்.

Image result for 11 people killed, 3 injured in a collision between a trailer truck and a jeep on Balotra-Phalodi highway in Jodhpur district

அப்போது பலோத்ரா-பலோடி நெடுஞ்சாலையில் ஷேகார் என்ற பகுதியில் இருக்கும் சோயின்ட்டாரா கிராமம் வழியாக  வந்தபோது எதிராக வந்த டிரக் அவர்கள் சென்ற காரின் மீது திடீரென பயங்கரமாக மோதியது. இதில் கார் உருக்குலைந்து போனது.

Image result for 11 people killed, 3 injured in a collision between a trailer truck and a jeep on Balotra-Phalodi highway in Jodhpur district

இந்த கோர விபத்தில் புதுமண தம்பதியர் விக்ரம் – சீதா மற்றும் குழந்தைகள், பெண்கள் உள்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி, பரிதாபமாக துடிதுடித்து இறந்தனர். மேலும் 3 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |