தமிழகத்தில் இன்று 110 கொரோனா உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இந்த நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த தகவலை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தில் இன்று இதுவரை இல்லாத அளவாக மேலும் 110 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4,571 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று புதிதாக 5,664 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 2,79,144 ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 1,091 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் 1,06,096 ஆக எகிறியுள்ளது. தமிழகத்தில் இன்று புதிதாக 6,272 குணமடைந்து வீடு திரும்பியதால், 2,21,087 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். தமிழகத்தில் தற்போது வரை 53,486 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் நேற்று 112 பேர் உயிரிழந்த நிலையில் இன்று 110 பேர் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.