சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 110ஆக அதிகரித்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறுகையில்,தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதில் 48 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 571இல் இருந்து 621 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதித்தவர்களை தவறாக சித்தரிக்க கூடாது என்று தெரிவித்தார்.
மேலும் தமிழகத்தில் 91, 851 பேர் வீட்டுக் கண்காணிப்பிலும், 205 பேர் அரசு கண்காணிப்பிலும் உள்ளனர். 28 நாட்கள் தனிமைப்படுத்தல், கண்காணிப்பு முடிந்து 19,060 பேர் சென்றுள்ளனர் என தெரிவித்த சுகாதாரத்துறை செயலாளர் ஒரே நாளில் சென்னையில் 15 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்றார். இதனால் தலைநகர் சென்னையில் 110 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.