கேரள மாநிலத்தில் 110 வயதான பாட்டி ஒருவர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளார்.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் இருக்கும் மக்களை துன்புறுத்தி வருகின்ற நிலையில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். அந்தவகையில் முதியவர்கள் சிறுவர்களை வெளியில் நடமாட வேண்டாம் என்றும் வீட்டில்தான் இருக்க வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தி வரும் நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வயது முதிர்ந்த முதியவர்கள் கூட சமீபத்தில் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ள அதிசயங்களும் நடைபெற்றிருக்கின்றன.
அந்த வகையில், மலப்புரம் மாவட்டதை சேர்ந்த 110 வயதுடைய ரந்தாதனி வரியத் பத்து என்பவருக்கு, கடந்த 18ம் தேதி கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அப்போது அவருக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே இருந்ததாகவும், எந்த ஒரு பதட்டம் மற்றும் பயம் இல்லாமல் சிகிச்சைக்கு அவர் முழு ஒத்துழைப்பு கொடுத்ததன் மூலம் குணமடைந்துள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, கேரள மாநிலத்திலேயே நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்த மிக வயதான நபர், இந்த பத்து பாட்டி தான் என சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலாஜா தெரிவித்துள்ளார்.