Categories
உலக செய்திகள்

அரசியல் பிரச்சனை தான் காரணம்..! பிரித்தானியாவிற்குள் நுழைந்துள்ள 1,100 வெளிநாட்டவர்கள்… வெளியான பரபரப்பு தகவல்..!!

பிரித்தானியாவுக்குள் ஆங்கிலேயே கால்வாய் வழியாக 1,100-க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமை அன்று சிறிய படகுகள் மூலம் புகுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானிய உள்துறை அமைச்சகம் ஆங்கிலேயே கால்வாய் வழியாக மொத்தம் 40 படகுகளில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று 624 பேரும், சனிக்கிழமை அன்று 491 பேரும் அந்நாட்டிற்குள் புகுந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. மேலும் பிரான்ஸ் கடற்படை சனிக்கிழமை அன்று 114 பேரையும், வெள்ளிக்கிழமை அன்று 300 பேரையும் ஆங்கில கால்வாய் வழியாக சென்றபோது அவர்களை கடக்க முயற்சித்ததோடு தடுத்து நிறுத்தியதாகவும் கூறியுள்ளது. ஆனால் பிரித்தானியாவுக்கும், பிரான்ஸ் நாட்டிற்கும் இடையேயான அரசியல் பிரச்சனையே ஆயிரக்கணக்கானோர் பிரித்தானியாவுக்குள் நுழைய காரணம் என்று கூறப்படுகிறது.

ஏனென்றால் அரசியல் பிரச்சினை தொடர்வதற்கு பத்து நாட்களுக்கு முன்பு பிரித்தானியாவுக்குள் இதுபோல் ஒருவர் கூட குடியேறவில்லை. இதற்கிடையே பிரித்தானிய அரசாங்கம் ஆங்கில கால்வாய் வழியாக அந்நாட்டிற்குள் நுழைபவர்களை தடுத்து நிறுத்தும் பணிக்கு உதவியாக வாக்குறுதி அளித்த பணத்தை பிரான்சுக்கு முதலில் கொடுக்குமாறு பிரான்ஸ் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் வலியுறுத்தியுள்ளார். இருப்பினும் பிரித்தானியாவிற்குள் அதிக மக்கள் நுழைவதை தடுக்காவிட்டால் அந்த நிதியானது நிறுத்தி வைக்கப்படும் என்று பிரித்தானிய உள்துறை செயலாளர் ப்ரீத்தி பட்டேல் கூறியுள்ளார். அதேசமயம் 1,100 பேர் உட்பட மொத்தம் 18 ஆயிரம் பேர் இந்த ஆண்டில் பிரித்தானியாவிற்குள் ஆங்கில கால்வாய் வழியாக வந்து குடியேறியுள்ளனர்.

Categories

Tech |