சீக்கிய மதத்தை நிறுவிய பாபா குருநானக் தேவ்-இன் 550ஆவது பிறந்ததினத்தை முன்னிட்டு நடத்தப்படும் நாகர் கீர்த்தன் ஊர்வலத்தில் பங்கேற்க இந்தியாவில் இருந்து 1100 சீக்கியர்கள் பாகிஸ்தானுக்கு சென்றுள்ளனர்.இதற்காக பஞ்சாப் மாநிலம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. பாகிஸ்தானுக்கு சென்ற இந்தியர்கள், பஞ்சாப் மாநிலம் லூதியானா மற்றும் அம்ரிஸ்டர் வழியாக சென்றனர்.
இதுகுறித்து ETPB துணை செயலாளர் இம்ரான் கோண்டல் பேசுகையில், இந்தியா – பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளுக்கும் இடையிலான கோயில்களுக்கு வருவதற்காக 1300 விசாக்கள் 1974ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது என்றார்.மேலும் ETPB சார்பாக பாகிஸ்தான் சீக்கியர் கமிட்டி, மாவட்ட நிர்வாகம் ஆகியவற்றுடன் இணைந்து சுற்றுலா வருவோர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.