தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக கடந்த வருடம் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப் படாமல் இருந்ததால் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு நடத்தப்படவில்லை. இதையடுத்து கொரோனா தொற்று கணிசமாக குறைந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9-12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
இதனைத் தொடர்ந்து நவம்பர் 1-ஆம் தேதி முதல் 1- 8ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதற்கான பணிகளை பள்ளி கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்விற்கான புதிய மையங்களை அமைப்பதற்கான கருத்துகளை வருகிற 30-ஆம் தேதிக்குள் சிஇஓக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அரசு தேர்வு இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.