உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கான 2021-2022 ஆம் வருடத்துக்கான விடுமுறை நாட்களுக்கான பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி 2022 ஆம் ஆண்டிற்கு 113 நாட்கள் விடுமுறைகளாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு 237 தினங்கள் வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டு உள்ளது. விடுமுறை நாட்களைப் பொறுத்தவரையிலும் மாணவர்களுக்கு 113 நாட்கள் விடுமுறையாக இருக்கும். இதனிடையில் விடுமுறை நாட்களில் ஞாயிற்றுக்கிழமைகளும் அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் போர்டு தேர்வுகளுக்காக 15 நாட்கள் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. 2022 ஆம் வருடத்திற்கான பொது விடுமுறை நாட்களின் எண்ணிக்கை 22 ஆகும். இதில் மே 21 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்படும். இத்தகைய மாணவர்களுக்கு கோடை விடுமுறையின் கடைசி நாள் ஜூன் 30 ஆகும். உத்தரப்பிரதேச மத்தியமிக் க்ஷிக்ஷா பரிஷத் குளிர்கால விடுமுறை பட்டியலை பொது விடுமுறை பட்டியலில் சேர்த்து கொள்ளவில்லை என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
ஆனால் குளிர்கால விடுமுறை நாட்களை விடுமுறை பட்டியலில் சேர்க்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்ட்டுள்ளது. டிசம்பர் 31 முதல் குளிர்கால விடுமுறைக்காக பள்ளிகள் அடைக்கப்படும். குளிர்கால விடுமுறைக்குப் பின் ஜனவரி 15 முதல் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுவதாகவும் குளிர் காலத்திற்கான பள்ளிகளின் நேரம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இருக்கும். மேலும் உள்ளூர் விடுமுறைகளை அளிக்க மாவட்ட ஆட்சியருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.