சீன நாட்டில் 11315 அதிகாரிகளுக்கு சிக்கன விதிகளை மீறியதால் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
சீன நாட்டின் சீன கம்யூனிஸ்ட் கட்சி குறித்த ஒழுங்குமுறை ஆய்வு தொடர்பிளான அறிக்கையை மத்திய ஆணையமும், தேசிய கண்காணிப்பு ஆணையமும் வெளியிட்டிருக்கிறது. அதில் கடந்த மாதத்தில் 11351 நபர்களுக்கு ஊழல் ஒழிப்புத்துறை தண்டனை வழங்கியுள்ளது.
அரசாங்கம் மற்றும் கட்சியினுடைய விதிமுறைகளை அவர்கள் மீறியதாக கூறப்படுகிறது. எனவே, 7441 வழக்குகள் அவர்கள் மீது இருக்கிறது. இவர்கள், கட்சி ஒழுங்கு நடவடிக்கைகளை மீறியது, சுயநலமாக செயல்பட்டது, ஆடம்பர நடவடிக்கைகள் போன்றவற்றிக்காக தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்.