Categories
மாநில செய்திகள்

114வது பிறந்த நாள் விழா… பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை!!

பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொனில் முத்துராமலிங்க தேவரின் 114வது பிறந்த நாள் விழா  மற்றும் 59வது குருபூஜை இன்று வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஐயாவின் பிறந்த நாள் மற்றும் குருபூஜை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. பசும் பொன் சென்று பல்வேறு அரசியல் தலைவர்கள், முக்கிய பிரபலங்கள் முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்..

இந்நிலையில் முதல்வர் மு.க ஸ்டாலின்  114-வது தேவர் ஜெயந்தியையொட்டி பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மேலும் அவருடன் அமைச்சர்கள்,, சட்டமன்ற உறுப்பினர்களும் மரியாதை செலுத்தினர்.

முன்னதாக முதல்வர் ஸ்டாலின், மதுரை கோரிப்பாளையத்தில் இருக்கும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்..

Categories

Tech |