Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று 114 பேர் டிஸ்சார்ஜ்.. அசத்தும் மருத்துவர்கள்!

தமிழகத்தில் இன்று கொரோனாவில் இருந்து சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 114 ஆக உயர்ந்துள்ளது.

இதையடுத்து, தமிழகத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 866 ஆக அதிகரித்துள்ளது. இன்று தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,755 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 72 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல, இன்று 2 பேர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

இதன் காரணமாக மொத்த உயிரிழப்புகள் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 52 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னையில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 452 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,752 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும் 37 இறப்புகள் பதிவாகியுள்ளன. கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 23,452ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் இதுவரை 723 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,814 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடம் பிடித்துள்ளது. மகாராஷ்டிராவில் 6,430, குஜராத்தில் 2,624, டெல்லியில் 2,376, ராஜஸ்தானில் 1,964, மத்திய பிரதேசத்தில் 1,699 மற்றும் தமிழ்நாட்டில் 1,683 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பாதிப்புகள் அதிகரிக்கும் அச்சமும் நிலவி வருகிறது.

Categories

Tech |