Categories
கிரிக்கெட் விளையாட்டு

115 ரன்களில்….. அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து….. சுருண்டது பஞ்சாப் அணி….!!!!

ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் போட்டியில் டெல்லி – பஞ்சாப் அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.

தொடக்க வீரர்களாக களமிறங்கிய அகர்வால் 24 ரன்களிலும், தவான் 9 ரன்களிலும் வெளியேறினர்.இதனால் பஞ்சாப் அணி 9 ஓவர்கள் முடிவில் 69 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து திணறியது.  பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் நடையை கட்ட பஞ்சாப் அணி 20 ஓவரில் 115 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதைத்தொடர்ந்து தற்போது டெல்லி அணி களமிறங்கியுள்ளது.

Categories

Tech |