மதுக்கடைகளில் 115 பேட்டி மது பாட்டில்கள் காணாமல் போனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் மதுபான கடை திறக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்தன. திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் இன்று காலை 10 மணிக்கு கருப்பு சின்னம் அணிந்து எதிர்ப்பு தெரிவித்தன. ஆனாலும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன், சமூக விலகலை பின்பற்றி மதுபானங்கள் விற்பனை ஜோராக நடைபெற்று வருகின்றது .40 நாட்களுக்கு பிறகு மதுக்கடைகள் திறந்ததால் ஏராளமானோர் நீண்ட வரிசையில் மதுவை வாங்கிச் செல்கின்றனர்.
இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சீதாராம்பாளையம் பட்டறைமேடு பகுதி டாஸ்மாக் கடையில் 115 பெட்டி மதுபாட்டில்கள் மாயம். மதுபானங்கள் காணாமல் போனது பற்றி மேற்பார்வையாளர் உள்ளிட்ட 3 பேரிடம் டாஸ்மார்க் வட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகின்றார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.