தமிழகத்தில் மட்டும் இன்று 1,162 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 23,495 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று புதிதாக 967 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 15,770 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 685 பேர் ஆண்கள், 473 பேர் பெண்கள், 4 திருநங்கை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இன்று ஒரே நாளில் 11,377 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 50,03,339 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 1,112 பேரும், வெளிநாடுகளில் இருந்து வந்த 50 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 43 அரசு மற்றும் 29 தனியார் மையங்கள் என மொத்தம் 72 கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.