Categories
உலக செய்திகள்

117 பேரின் எலும்புக்கூடுகள்…. ஒரே நேரத்தில் தகனம்…. இணையத்தில் புகைப்படங்கள் வைரல்….!!!

இந்தோனேஷியாவில் உள்ள பாலித்தீவில் படங்பாய் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் வசிக்கும் இந்து மக்கள் ஒரு வினோதமான சடங்கை செய்து வருகின்றனர். அதாவது அந்த கிராமத்தில் ஒருவர் இறந்து விட்டால் முதலில் அவர்களின் உடல்களை சவப்பெட்டியில் வைத்து புதைத்து விடுவார்கள். அதன் பின் சிறிது காலத்திற்கு பிறகு புதைக்கப்பட்ட சவப்பெட்டியை வெளியில் எடுத்து அதில் உள்ள எலும்புக்கூடுகளை ஒரு பெட்டியில் அடைத்து வைப்பார்கள். அதன் பிறகு சடங்குகளுக்கு ஏற்பாடு செய்து, 20 அடி உயரத்தில் இருக்கும் எருது வடிவிலான தேரில் பொதுமக்கள் தாங்கள் வைத்திருக்கும் எலும்பு கூடுகளுடன் இறந்தவர்களின் புகைப்படத்தையும் எடுத்துச் சென்று அஞ்சலி செலுத்துவார்கள். இதனையடுத்து தாங்கள் கையில் வைத்திருக்கும் எலும்புக்கூடுகள் அடங்கிய பெட்டியை எருது வடிவில் இருக்கும் பொம்மையில் வைத்து விடுவார்கள்.

அந்த வகையில் 117 பேரின் எலும்புக்கூடுகள் எருது பொம்மைக்குள் வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 117 பேரின் எலும்புக்கூடுகளும் வைக்கப்பட்ட பொம்மையை தீவைத்து கொளுத்தினர். மேலும் எலும்புக்கூடுகள் அடங்கிய பொம்மை முழுமையாக எரிந்து முடிந்த பிறகு அந்த சாம்பலை எடுத்து மக்கள் கடற்கரையில் கரைத்தனர். இப்படி செய்வதால் இறந்தவர்களின் ஆன்மாக்கள் சாந்தி அடைந்து புது வாழ்வை தொடங்குவதாக கிராம மக்கள் நம்புகின்றனர். இந்த சடங்கை தனியாக செய்வதால் அதிக செலவாகும் என்பதால் மக்கள் நிறைய சடலங்களின் எலும்புக்கூடுகளை ஒன்றாக வைத்து சடங்கு செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |