தமிழகத்தில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் ஆண்டு இறுதித்தேர்வு முடிவடைந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த ஜூன் 13ஆம் தேதி ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. அதற்கான வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. அதனை பின்பற்றி மாணவர்களுக்கு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் 11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறந்த முதல் ஐந்து நாட்கள் ஆன்லைன் வகுப்புகளால் ஏற்பட்ட மன அழுத்தங்கள் மற்றும் மன மாற்றங்களில் இருந்து விடுபட புத்துணர்வு மற்றும் நல்வழி காட்டும் வகுப்புகள் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். அப்போது போக்சோ சட்டம் குறித்தும், குழந்தைகளிடம், பெண்களிடம் நடந்து கொள்ளும் விதம் குறித்தும் கற்றுத் தரப்படும். மேலும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உறவு மேம்படவும் ஆலோசனைகள் வழங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.