சிறுவன் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தெலுங்குபாளையம் பாரதி ரோட்டில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நவீன்குமார்(15) என்ற மகன் இருந்துள்ளார். இவர் டவுன்ஹால் பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் பள்ளிக்கு செல்லாமல் நவீன் குமார் தனது நண்பர்கள் 3 பேருடன் முண்டந்துறை தடுப்பணைக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சிறுவன் தண்ணீரில் மூழ்கிதை பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள் அவரை காப்பாற்ற முயற்சி செய்தனர்.
ஆனால் நவீன் குமாரை காப்பாற்ற இயலவில்லை. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு சிறுவனின் உடலை மீட்டனர். பின்னர் சிறுவனின் உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.