செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ஆகம விதிகளின்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கவேண்டியகும்பாபிஷேகங்கள், 12 ஆண்டுகள் கழித்து நடைபெறாமல் இருக்கின்ற கோவில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்துவதற்கும், நெடுங்காலமாக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருக்கின்ற திருகோவில்களையும் நேரடியாக சென்று ஆய்வு செய்து, காலதாமதத்தை போக்கி விரைவுபடுத்தவும்,
12 ஆண்டுகள் பூர்த்தியடைந்திருக்க கோவில்களுக்குத் திருப்பணிகள் மேற்கொள்ளவும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் வழிகாட்டுதலின்படி செய்கின்றோம். நாமக்கல் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதன் நோக்கம் ஆஞ்சநேயர் சாமி திருக்கோவிலையொட்டி அங்கே அந்த திருக்கோவில் பணிபுரிகின்ற பணியாளர்களுடைய விடுதிகள் இருக்கின்றன. ஆஞ்சிநேயர் என்பவர் பிரம்மச்சாரியம் மேற்கொள்பவர்.
அந்த வகையிலே குடும்பத்தோடு அங்கு இருப்பது பல மூத்தவர்கள், பொதுமக்கள் மற்றும் அர்ச்சகர்கள் பட்டாச்சாரியார்கள் அப்படி இருக்கக் கூடாது என்ற கோரிக்கையை வைத்திருக்கின்றார்கள்.அவர்களுக்கு மாற்று இடமாக பக்கத்தில் 500 மீட்டர் தொலைவிலே இருக்கின்ற இடத்தில் புதிதாக அவர்களுக்கு குடியிருப்புகளை ஏற்படுத்தி தரவும், அதேபோல் ஆஞ்சிநேயர் திருகோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் ஆண்டுதோறும் தரிசனத்திற்கு வருவது அனைவரும் அறிந்ததே…
அப்படி வருகின்ற பக்தர்களுக்கு போதிய அளவு தங்குகின்ற வசதி இல்லை என்பதால் பக்தர்கள் தங்கும் இடத்தை ஏற்படுத்தித் தர நம்முடைய மாவட்டத்தை சார்ந்த செயலாளர் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அதையும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கவனத்திற்கு கொண்டு சென்று அதற்க்கான பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றது.
அதேபோல் சோளிங்கரில் திருகோவில் சுற்றுச்சுவர் பாதிப்படைந்து இருக்கின்றது, அதையும் சம்மந்தப்பட்ட துறையிடம் கொண்டு சென்று அங்கு திருப்பணிகள் மேற்கொள்ளவும் முறையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதேபோல் சோளிங்கர் திருக்கோவிலில் நாச்சியாருக்கு உண்டான திருக்கோவிலை ஏ.எஸ். முழுமையாக அந்த இடத்தை பயன்பாட்டில் வைத்திருக்கின்றது.
இந்த மாவட்டத்தினுடைய பக்தர்கள் மற்றும் அர்ச்சகர்கள் கோரிக்கையை ஏற்று அந்த இடத்தை பழையது போல் நாட்சியாருக்கான திருக்கோவிலுக்கு வழங்க மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அது குறித்த தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கின்றோம் வெகு விரைவில் அதே இடத்தில் நாச்சியார் திருக்கோவில் அமைத்து தரப்படும் என தெரிவித்தார்.