நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ், 16.05.2016ஆம் புரட்சி தலைவி அம்மா அவர்கள் தலைமையில் கூட்டணியாக… அதைத் தொடர்ந்து புரட்சித்தலைவி அம்மாவினுடைய மறைவிற்குப் பிறகும், கடந்த ஒரு வாரங்களுக்கு முன்பாக நிறைவுபெற்ற சட்டமன்ற இறுதி கூட்டதொடர் வரை… புரட்சித்தலைவி அம்மா அவர்களுடைய பெயரிலே இயங்கிக்கொண்டிருந்த இந்த ஆட்சியில்…. குறிப்பாக புரட்சி தலைவி அம்மா அவர்கள் எங்களுக்கு இந்த அங்கீகாரம் வழங்கியபொழுது….
நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் ? என புரட்சித்தலைவி அம்மா அவர்கள் என்னிடம் கேட்கும் போது… இன்றைக்கு முதலமைச்சராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிச்சாமி அவர்களும்….. முன்னாள் அமைச்சராக இருந்த வைத்தியலிங்கம் அவர்களும் உடன் இருந்தார்கள் .
அம்மா என்னிடம் கேட்ட போது, அம்மா..! 1994இல் நந்தனத்தில் தெய்வத் திருமகன் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் சிலையை திறந்து, அன்றைக்கு நீங்கள் கள்ளர், மறவர், அகமுடையாரை தேவர் இனம் என்று அறிவித்த அந்த அரசாணையை நடைமுறைப் படுத்தி, ஒட்டுமொத்த தமிழகத்தில் இருக்கக்கூடிய 358ஜாதி மக்களுடைய…
ஜாதி ரீதியான கணக்கெடுப்பை நடத்தி…. மக்கள் தொகையினுடைய அடிப்படையிலே, நான் சார்ந்த என்னுடைய முக்குலத்தோர் சமுதாயத்திற்கான இட ஒதுக்கீடு களை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தேன்.
அப்பொழுது புரட்சித்தலைவி அம்மா அவர்கள், எடப்பாடி அவர்களுக்கு முன்பாகவும், வைத்தியலிங்கம் அவர்களுக்கு முன்பாகவும்…. என்னிடத்திலே எப்பொழுதும் இங்கு வந்தாயோ…. அப்பொழுது அது உனக்கு கிடைத்ததுபோல் தானே அருத்தம் என்ற பதிலை புரட்சித்தலைவி அம்மா அவர்கள் எனக்கு சொன்னார்கள்.
அந்த நம்பிக்கையில்தான் புரட்சித் அம்மா அவர்கள் உயிரோடு இருந்த பொழுது பூலித்தேவருக்கு அரசு விழா எடுக்க வேண்டும் என்ற என்னுடைய கோரிக்கை ஏற்று உடனடியாக அரசு விழாவாக அறிவித்து அமைச்சர் பெருமக்களையும், மாவட்ட ஆட்சியாளர் தலைமையிலே அரசு விழா நடத்தினார்கள். இதில் கருணாஸை முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற உத்தரவையும் பிறப்பித்தார்கள்.
அதற்கு பிறகாக…. இந்த நான்கு ஆண்டுகளில்… கடைசியாக முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரிலே கூட கடைசி நிமிடம் வரை 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினேன். கிட்டத்தட்ட 19முறை நான் இந்த நான்கு ஆண்டுகளில் சட்டமன்றத்திலே பேசி இருக்கிறேன். இந்த 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 25 மாவட்டங்கள் 15 நாட்களாக சுற்றுப் பயணம் செய்திருக்கிறேன். நான் சார்ந்த என்னுடைய முக்குலத்தோர் சமுதாயத்தினுடைய இட ஒதுக்கீடு விஷயத்திலே 26 ஆண்டு காலங்களாக முக்குலத்தோர் சமுதாயம் வஞ்சிக்கப்பட்டு கொண்டிருக்கிறது.
ஆகவே என்னுடைய 12அம்ச கோரிக்கைகளில் ஏதாவது… சில கோரிக்கைகளையாவது மத்திய – மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என்று நான் நீண்ட நடு நாளாக அவர்களை நம்பி இருந்தேன். பாரதிய ஜனதா கட்சி தலைமையில் இருக்கக்கூடிய இன்றைய மத்திய அரசு, பசுமை முத்துராமலிங்க தேவருடைய பெயரை விமான நிலையத்திற்கு வைக்க வேண்டும் என்ற பொழுது ஒரு சமுதாய மக்களுடைய கோரிக்கை நீண்ட நாட்களாக வைத்திருக்கிறார்கள். அந்த கோரிக்கை நிறைவேற்றப்படுகின்றபொழுது மதுரை விமான நிலையத்திற்கு பெயர் வைக்கப்படும் என்று அன்றைக்கு சொன்னார்கள் . ஆனால் இறுதியாக நான் கேட்ட பொழுது, மத்திய அரசாங்கத்திலே அப்படி எந்த திட்டமும் இப்பொழுது இல்லை என்று கைவிரித்து விட்டார்கள்.
மத்திய அரசும், மாநில அரசுமாக இருக்கக்கூடிய எடப்பாடி தலைமையிலான இந்த அரசும் தொடர்ந்து என்னுடைய கோரிக்கைகளை புறம் தள்ளி, கடைசி நிமிடம் வரை நான் ஏதாவது செய்து தருகிறேன்… செய்து தருகிறேன்…. என்று எங்களை நம்ப வைத்து கழுத்தை அறுத்ததை போல் எங்களை அரசியல் அனாதைகள் ஆக்குவதற்கு மிகப்பெரிய ஒரு சதித் திட்டத்தை எடப்பாடி தலைமையிலான இந்த அரசு செய்து கொண்டிருக்கிறது.
முக்குலத்தோர் சமுதாயத்திற்கு எதிராக, மற்ற சமுதாயங்களை… சில சமுதாயங்களை ஒருங்கிணைத்து… இந்த சமுதாய மக்களை அரசியல் அனாதைகள் ஆக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் என அரசு மீது அதிருப்தி தெரிவித்தார்.