பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அவற்றை கட்டுக்குள் வைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் பள்ளிகளுக்கு வரும் மாணவர்களுக்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்துவருகின்றது. இதன் காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடத்த அனுமதி வழங்கியிருந்தது.
இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ரத்து செய்துவிட்டு அதற்கு முந்தய தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண்களை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஒருவேளை பொதுத் தேர்வு நடத்தியே தீரவேண்டும் என்ற கட்டாயம் இருந்தால் ஆன்லைனில் தேர்வு நடத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.