பிரதேச மாநிலத்தில் பிளஸ் டூ படிக்கும் மாணவி கூட்டு பாலியல் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 3இளைஞர்களுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலத்தில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவி ஒருவர் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது காரில் வந்த சில நபர்கள் அவரைக் கடத்திக் கொண்டு காரில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததில் மாணவியின் உயிர் பிரிந்தது. அதனால் அவரை உயிரோடு விட்டு விட்டால் தங்களுக்கு ஆபத்து என்று நினைத்து அங்கிருந்து 40 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு கால்வாயில் வீசி விட்டு சென்று விட்டனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிசிடிவி ஆதாரங்களைக் கொண்டு குற்றவாளியை கண்டறிந்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கு 3 ஆண்டுகள் நடைபெற்ற நிலையில் தற்போது இவர்களுக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். இதைக் கேட்டு சிறுமியின் பெற்றோர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.