Categories
கிரிக்கெட் விளையாட்டு

12வது லீக் போட்டி…. சொதப்பிய பேட்ஸ்மேன்கள்…. செம அப்செட்டில் காவ்யா மாறன்….!!!!

ஐபிஎல் 15-வது சீசனின் 12-வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிக்கொண்டன. முதலில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 169/7 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் இலக்கை துரத்தி களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் கேன் வில்லியம்சன் (16), அபிஷேக் சர்மா (13) ஆகியோர் பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை. அடுத்ததாக களமிறங்கிய எய்டன் மார்க்கரமும் ஏமாற்றினார். அதனை தொடர்ந்து நிக்கோலஸ் பூரன், ராகுல் திரிபாதி (44) இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றி பாதையை நோக்கி அணியை அழைத்து சென்றனர்.

இறுதியாக 18 பந்துகளில் 33 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை உருவானது. அப்போது பூரன் (34) 18வது ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர், பின்னர் மூன்றாவது பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய அப்துல் சமாத் அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். இதனால் 7 ரன்கள் மட்டுமே அந்த ஓவரில் கசிந்தது. இந்த ஓவர் தான் தோல்விக்கு முக்கிய காரணம் என்று கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து 19-வது ஓவரில் புவனேஷ்வர் குமார், செய்பர்ட், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இதனால் 12 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தோற்றது. ஆனால் காவ்யா மாறன் 18-வது ஓவர் வரை அணி வெற்றி பெற்றுவிடும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்தார். இருப்பினும் அப்துல் சமாத், பூரன் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் அவர் சோகத்தில் மூழ்கினார். இதையடுத்து அணி மீட்டிங்கில் பேசிய காவ்யா மாறன், இனியும் எதற்காக அப்துல் சமாத்துக்கு வாய்ப்பு கொடுக்கிறீர்கள் ?அவரை நீக்கிவிட்டு புதிதாக ஒருவருக்கு வாய்ப்பு கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது.

Categories

Tech |