12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 55 வயது நபரை இயற்கை முறையில் மறையும் வரை மரணமடையும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமை செய்ததால் 12 வயது சிறுமி கர்ப்பம் ஆகியுள்ளார். 4 மாத கர்ப்பமாக இருந்த நிலையில் சிறுமியின் பெற்றோருக்கு இவ்விவகாரம் தெரியவந்துள்ளது. இதுகுறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் ஆறுச்சாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர் .இவ்வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் ஆறுச்சாமி குற்றவாளி என்பது நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து அவர் இயற்கை முறையில் உயிர் போகும் வரைசிறை தண்டனை விதித்தும் ,1000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது .