Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

12 அடி நீளமுள்ள நல்லபாம்பு…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

தோட்டத்திற்குள் புகுந்த நல்ல பாம்பை தீயணைப்பு துறையினர் பத்திரமாக பிடித்தனர்.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அய்யம்பாளையம் பகுதியில் பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான தோட்டத்தில் நல்ல பாம்பு ஒன்று பதுங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புதுறையினர் சுமார் 12 அடி நீளமுள்ள நல்ல பாம்பை பத்திரமாக பிடித்துவிட்டனர்.

இதேபோல் கோபிநாதன் என்பவரது வீட்டிற்குள் பகுதி இருந்த 9 அடி நீளமுள்ள சாரை பாம்பை தீயணைப்பு துறையினர் பத்திரமாக பிடித்தனர். இந்த 2 பாம்புகளும் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு காட்டுப்பகுதியில் விடப்பட்டுள்ளது.

Categories

Tech |