அரசு ஊழியர் ஒருவர் 50 பெண் குழந்தைகளை வன்கொடுமை செய்துள்ளதால், அவரை சிபிஐ கைது செய்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் அரசு ஊழியர் ஒருவர் 50 பெண் குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவரை சிபிஐ கைது செய்துள்ளது. இவர் பாண்டா மாவட்டத்தில் நீர்ப்பாசனத்துறை பொறியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த பத்து வருடங்களாக 50க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி அதை வீடியோவாக தனது செல்போனில் எடுத்துள்ளார். ரகசியமாக எடுத்த இந்த வீடியோக்களை இணையதளங்களுக்கு விற்பனை செய்துள்ளார்.
காவல் துறையினரின் விசாரணையில் இவர் சித்ரகூட் மற்றும் ஹிரம்பூரில் 5 முதல் 16 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் இவரிடமிருந்து 8 செல்போன்கள் மற்றும் 8 லட்சம் ரூபாய் பணத்தை சிபிஐ பறிமுதல் செய்துள்ளது. உத்திரபிரதேசத்தில் ஹித்ரஸ் சம்பவம் நடந்து இரண்டு மாதங்கள் கூட முடியாத நிலையில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.