Categories
பல்சுவை

12 ஆண்டுகளுக்கு பின் தனது குடும்பத்துடன் சேரும் சிறுமி …!!

நான்கு வயதில் காணாமல் போன சிறுமி ஒருவர் பேஸ்புக் உதவியால் 12 ஆண்டுகளுக்கு பின் தனது குடும்பத்துடன் இணைய உள்ளார்.

 

ஆந்திராவில் விஜய நகரத்தை சேர்ந்த பவானி என்ற 16 வயது சிறுமி தனது 4 வயதில் காணாமல் போன நிலையில் விஜயவாடாவை சேர்ந்த பெண் ஒருவர் அவருக்கு அடைக்கலம் கொடுத்து வளர்த்து வந்துள்ளார் இந்த நிலையில் வம்சி கிருஷ்ணா என்பவர் வீட்டிற்கு வீட்டு வேலை கேட்டு பவானி சென்ற நிலையில் அங்கு அவரிடம் அடையாள ஆவணங்கள்  கேட்கப்பட்டன. அப்போதுஅந்த சிறுமி தான் சிறுவயதில் தொலைந்த கதையை வம்சி கிருஷ்ணாவின் கூறியுள்ளார்.

 

இதனையடுத்து அவரது உறவினர்கள் குறித்து சிறு சிறு தகவல்களை கேட்டுப் பெற்ற வம்சி கிருஷ்ணா அவற்றைக் கொண்டு பேஸ்புக் மூலமாக தேடி அவரது சகோதரர்களின் பேஸ்புக் அக்கவுண்டை கண்டுபிடித்தார் பின்னர் வீடியோ காலில் பவானியின் குடும்பத்தினர் தொடர்பு கொண்டு பவானி குறித்த அடையாளங்கள் உறுதிபடுத்தப்பட்டன . இதனையடுத்து 12 ஆண்டுகளுக்குப் பிறகு தனது குடும்பத்துடன் சிறுமி  பவானி மீண்டும் இணைய உள்ளார்.

Categories

Tech |