Categories
மாவட்ட செய்திகள்

12 ஆண்டுகளுக்கு பிறகு… நெல் சாகுபடி…. மகிழ்ச்சியில் விவசாயிகள்….!!

பெரம்பலூர் மாவட்டம் குன்னூர் அருகிலுள்ள மூங்கில்பாடி கிராமத்தில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த மழையில் விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் நன்செய் உழவு செய்து நெல் சாகுபடி செய்தனர். அதன் பிறகு கடந்த 12 ஆண்டுகளாக மழைப்பொழிவு இல்லாததால் மூங்கில்பாடி பெரிய ஏரி வறண்டு போனது. ஆடு மற்றும் மாடுகளுக்கு கூட தண்ணீர் தேங்காத நிலை ஏற்பட்டது. இதனால் வேறு வழியில்லாமல் விவசாயிகள் நன்செய் நிலங்கள் அனைத்தும் புன்செய் நிலமாக மாற்றதில் மக்காச்சோளம் மற்றும் பருத்தி ஆகிய பணப்பயிர்களை விவசாயிகள் தொடர்ந்து சாகுபடி செய்தனர்.

இந்நிலையில் இந்த ஆண்டு கடந்த நவம்பர் மாதம் பெய்த தொடர் மழையின் காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளும் நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இதில் மூங்கில்பாடி பெரிய ஏரி நிரம்பியது. அதனைத் தொடர்ந்து இந்த கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் புன்செய் நிலங்களில் பருத்தி மற்றும் மக்காச்சோளம் சாகுபடி செய்த நிலங்களில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நன்செய் நிலங்களாக மாற்றி தற்போது நெல் சாகுபடி செய்து வருகின்றனர். இதனால் மீண்டும் தங்களுக்கு நல்ல மகசூலும்,லாபமும் கிடைக்கும் என்று விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Categories

Tech |