கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு CBSE மற்றும் CISCE தேர்வுகள் மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களிலும் பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து தமிழகத்திலும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டார். இதற்கு ஒருபுறம் பாராட்டுகளும், ஒருபுறம் எதிர்ப்புகளும் கிளம்பிய வண்ணம் உள்ளன.
இந்நிலையில் தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து ராம்குமார் என்பவர் தொடர்ந்த வழக்கில் மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் +2 தேர்வை ரத்து செய்த உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. பள்ளி கல்வித்துறை எடுக்கும் முடிவுகளில் எப்படி நீதிமன்றம் தலையிட முடியும்? என்று கேள்வி எழுப்பி நீதிபதிகள் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 23-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.