புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்ததை அடுத்து கடந்த செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் முதல் கட்டமாக 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான நான் அவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை மட்டுமே வகுப்புகள் நடைபெறுகிறது.புதுச்சேரியில் தமிழக பாட திட்டம் பின்பற்றப் பட்டு வருவதால் பள்ளிகள் திறப்பில் தமிழக முறையை புதுச்சேரி அரசு பின்பற்றி வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் அடுத்த கட்டமாக ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்ற புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. ஆனால் பள்ளிகள் திறப்பு தேதி மாற்றம் செய்யப்பட்டு நவம்பர் 8ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.இந்நிலையில் புதுச்சேரி விடுதலை நாள் விழாவில் பங்கேற்ற முதல்வர் ரங்கசாமி, புதுச்சேரியில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக தமிழகத்தில் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. அதனைத் தொடர்ந்து இந்த திட்டம் புதுச்சேரியிலும் இனி தொடங்கப்பட உள்ளது. அதனால் பள்ளி மாணவர்கள் பயன் அடைவார்கள். மாணவர்கள் கல்லூரி காலத்திலேயே அரசின் இலவச மடிக்கணினி மூலம் இத்தகைய அறிவைப் பெறமுடியும். இதனால் எதிர்காலத்தில் அவர்களின் பணிக்கு பெரிதும் உதவும். மேலும் பள்ளிகளில் மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் முதல்வர் கூறியுள்ளார்.