12- ஆம் வகுப்பு மாணவிக்கு தாலி கட்டிய விவகாரத்தில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் காந்தி சிலை அருகே இருக்கும் பயணிகள் நிழற்குடையில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு தாலி கட்டிய வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இதுகுறித்து குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் போலீசார் 12 ஆம் வகுப்பு மாணவி, கல்லூரி மாணவர், அவர்களது பெற்றோரிடம் விசாரணை நடத்தினர்.
இதனை அடுத்து போலீசார் அந்த மாணவியை கடலூரில் இருக்கும் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும் குழந்தைகள் திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் மாணவரை போலீசார் கைது செய்து கடலூரில் இருக்கும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். இதனையடுத்து மாணவர் தாலி கட்டும் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்ட பாலாஜி கணேஷ்(50) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை கொண்டு வருகின்றனர்.