12- ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள பாலக்குறிச்சி பகுதியில் பிரவீனா(16) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் 12- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பிரவீனா எலி பேஸ்ட்டை தின்று மயங்கி கிடந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதனை அடுத்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரவீனா சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் பிரவீனா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.