12 கோரிக்கையை அதிமுகவிடம் சொல்லி ஒன்னும் செய்யாததால் இன்று தோத்துவிட்டதாக கருணாஸ் விமர்சித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், அரசியலில் ஒரு ஜாதி கட்சியாக ஏடிஎம்ககே மாறியது, ஒரு சமூகத்தினுடைய கட்சியாக மாறியது, அனைத்து முக்குலத்தோர் சமுதாய மக்களை புறக்கணித்து இந்த அரசியலை அந்த தலைமை சந்தித்தது, இதனுடைய படுதோல்விக்கு காரணம். தலைமையில் சரியாக இல்லை என்று , அந்த கட்சியில் இருப்பவர்கள் கூறிய ஒரு தகவல். அம்மா இருக்கும்போது அந்த கட்சியின் கூட்டணியில் இருந்த எனக்கு தேர்தலில் வாய்ப்பு கொடுத்தார்.
நான் வெற்றி பெற்றதற்கு பிறகு, எங்களுடைய 12 அம்ச கோரிக்கைகள் இவை. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கள்ளர், மறவர், அகமுடையர் தேவர் இனம் என்று அறிவித்த 94 இல் வெளியிட்ட அரசாணையை நடைமுறைப்படுத்த கெண்டுகொண்டிருக்கிறோம்.மேலும் மதுரை விமான நிலையத்துக்கு தேவர் அய்யா பெயர் வைக்க கோரிக்கை வைத்துள்ளோம்.மேலும் மருது பாண்டியர்கள் சிலையை சிவகங்கை சீமையிலும் பாராளுமன்றத்திலும் அமைக்க வேண்டும்.
சுதந்திரத்திற்காக தன் உயிரை நீத்த தியாகிகளுக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்று தொடர்ந்து 12 கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளோம். அதில் ஒரு கோரிக்கையை தான் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி அதன் பிறகு மக்கள் தொகையினுடைய கணக்கு அடிப்படையில் உரிய இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். அந்த மக்களுடைய இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். எங்களை சார்ந்த கள்ளர் மறவர் அகமுடையார் ஆகியோருக்கும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வைத்தோம்.ஒரு கோரிக்கையை கூட அந்த அரசு ஏற்றுக்கொள்ளவில்லை .அதை செயல்படுத்தவும் இல்லை. இவை அனைத்தும் அந்த கட்சி தோற்று போவதற்கு காரணம் என்று கூறியுள்ளார்.