கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் சந்தைகள், ரயில்வே நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தெரு நாய்களின் தொல்லை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது என்று பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். அதில் பாதசாரிகள், இருசக்கர வாகனங்களில் செல்வோரை தெரு நாய்கள் துரத்தி கடிப்பதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து சிறுவர்கள், முதியோர்கள் என்று பலரும் நாய்களால் கடிபட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா தொற்று பரவல் ஒருபுறம், பறவை காய்ச்சல் மறுபுறம் என நோயாளிகள் மருத்துவமனைக்கு அதிகமாக வருகின்றனர். இதனிடையில் புத்தாண்டு பிறந்து கடந்த 12 நாட்களில் மட்டும் 500-க்கும் மேற்பட்டவர்கள் தெரு நாய்கள் கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே தெருநாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த அவற்றை பிடித்து மாநகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.