ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு பொது விடுமுறைகள் அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி செப்டம்பர் மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் 12 நாட்கள் வரை வங்கிகள் இயங்காது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. எனவே வங்கி விடுமுறை நாட்களைப் பொறுத்து வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி தொடர்பான சேவைகளை விரைந்து முடித்து கொள்ளுங்கள். குறிப்பாக ஏடிஎம்களில் பணம் தட்டுப்பாடு ஏற்படலாம். வங்கிகளுக்கு விடுமுறை என்பதால், தேவை இருக்கும் பட்சத்தில் பண நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் முன்னதாக பணத்தை எடுத்து வைத்துக் கொள்வது நல்லது.
விடுமுறை நாட்கள்
செப்., 5, 12, 19, 26ம் தேதிகளில் ஞாயிறு விடுமுறை.
செப்., 11ம் தேதி, 2வது சனிக்கிழமை மற்றும் விநாயகர் சதுர்த்தி,
செப். 25ம் தேதி 4வது சனிக்கிழமை.
செப்., 8ம் தேதி – ஸ்ரீமந்த சங்கரதேவரின் திதியை முன்னிட்டு கவுகாத்தியில் வங்கிகள் செயல்படாது.
செப்., 9ம் தேதி – தீஜ் தினத்தை முன்னிட்டு ஹரித்தாலிகா மற்றும் கேங்டாக் பகுதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை.
செப்., 10ம் தேதி – விநாயகர் சதுர்த்தி பண்டிகையை தொடர்ந்து அகமதாபாத், பெலாப்பூர், பெங்களூரு, புவனேஸ்வர், சென்னை, ஹைதராபாத், மும்பை, நாக்பூர், பனாஜி உள்ளிட்ட நகரங்களில் வங்கிகள் மூடப்படும்.
செப்., 17ம் தேதி – கர்ம பூஜையை முன்னிட்டு ராஞ்சியில் வங்கிகள் இயங்காது.
செப்., 20ம் தேதி – இந்திரஜத்ரா பண்டிகை காரணமாக கேங்டாக் பகுதியில் வங்கிகள் செயல்படாது.
செப்., 21ம் தேதி – ஸ்ரீ நாராயண குரு சமாதி நாளை முன்னிட்டு கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.