தங்களுக்கு தொற்று உறுதியானதா என்பதை கண்டறிய 12 நிமிடத்தில் முடிவை தெரிவிக்கும் புதிய பரிசோதனை முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது
சாதாரண காய்ச்சல் ஜலதோஷம் வந்து விட்டாலே தற்போதைய சூழலில் தங்களுக்கு கொரோனா பாதிப்பு இருக்குமோ என்று பலரும் பயம் கொள்கின்றனர். அவர்களுக்காகவே பரிசோதனை செய்து 12 நிமிடங்களில் முடிவை அறிந்து கொள்ளும் விதமாக அதிவேக பரிசோதனை முறை பிரிட்டனில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த புதிய பரிசோதனை முறையில் 97% துல்லியமான முடிவுகள் கிடைக்கும். 15 நாட்களில் இந்த சோதனை முறை பயன்பாட்டிற்கு வந்துவிடும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனை தயார் செய்து இருக்கும் பூட்ஸ் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாகி செபாஸ்டியன் கூறுகையில், “இந்த பரிசோதனை முறை அதிக எண்ணிக்கையில் பரிசோதனைகளை செய்து பிரிட்டன் மக்கள் தாங்கள் பாதுகாப்பானவர்கள் என்பதை உணர்ந்து வாழ்க்கையை தொடர உதவி புரியும். இந்த பரிசோதனை செய்வதற்கு 120 பவுண்டுகள் என்று தற்போது முடிவு எடுக்கப் பட்டுள்ள நிலையில் இதன் தேவை அதிகரித்தால் கட்டணம் குறைக்கப்படும்” என தெரிவித்துள்ளார். இந்த பரிசோதனை முறை அறிகுறி இல்லை என்றாலும் தனக்கு கொரோனா இருக்குமோ என்ற அச்சத்தில் தவிப்பவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.