Categories
தேசிய செய்திகள்

12 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த ஆட்டோ… திடீரென்று மோதிய லாரி… 6 பேர் பலி…!!

ஆந்திரப் பிரதேசத்தில் ஆட்டோவும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரப் பிரதேசம், நஸ்விட்  பகுதியில் உள்ள கொல்லப்பள்ளி கிராமத்தில் இன்று அதிகாலை ஆட்டோ  ஒன்றின் மீது லாரி மோதியது. ஆட்டோவில் ஓட்டுநர் உடன் சேர்ந்து 12 பேர் பயணித்த நிலையில், ஓட்டுனருடன்  சேர்த்து மொத்தம் 6 பேர் சம்பவ இடத்தில் பலியாகினர். மீதமுள்ள 7 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை பெற்று வருபவர்களில் மூன்று பேர் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்கள் உயர் சிகிச்சைக்காக விஜயவாடா அரசு மருத்துவமனைக்கு மாற்றம் பெற்றுள்ளன. இவர்கள் அனைவரும் அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்த கூலித்தொழிலாளர்கள். இந்த நிலையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாகியுள்ள லாரி ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |