சட்டசபையில் தற்காலிக சபாநாயகர் பாஸ்கர் ஜாதவுக்குக்கு எதிராக பாஜக உறுப்பினர்கள் தகாத வார்த்தைகளால் பேசிய காரணத்தினால் அவர்களை ஒரு ஆண்டுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் நடைபெற்ற சட்டசபையில் பாஜகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். சட்டசபையை வழிநடத்திய தற்காலிக சபாநாயகர் பாஸ்கர் ஜாதவ்க்கு எதிராக பாஜக உறுப்பினர்கள் தகாத வார்த்தைகளால் பேசியது மட்டுமல்லாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சட்டசபையில் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது.
அவர்களை அமைதியாக இருக்கும்படி சபாநாயகர் பாஸ்கர் கேட்டுக் கொண்ட போதும், அவர்கள் மீண்டும் மீண்டும் சண்டையில் ஈடுபட்ட காரணத்தினால், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட 12 பாஜக எம்எல்ஏக்கள் ஒரு வருடம் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.