சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அதிகாரிகள் 4 பேருக்கும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உடல் பரிசோதனை நடைபெறுகின்றது.
சாத்தன்குளத்தில் உள்ள காவல்நிலையத்தில் தந்தை – மகன் சித்தரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிசிஐடி போலீஸ் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன், ரகுக னேஷ் மற்றும் இரண்டு காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பது. இதில் முதலில் கைது செய்யப்பட்ட எஸ்.ஐ ரகு கணேஷ் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அதனை தொடர்ந்து சிபிசிஐடி காவலர் கஸ்டடியில் இருந்த காவல் ஆய்வாளரின் ஸ்ரீதர், எஸ்.ஐ பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன் உட்பட 3 பேரிடம் காலை 6 மணி முதல் கிட்டத்தட்ட 12 மணி நேரம் தற்போது வரை நடைபெற்ற நீண்ட விசாரணைக்குப் பின்னர் நீதிபதி மன்றத்தின் முன்பாக நிறுத்துவதற்குகான ஏற்பாடுகளை சிபிசிஐடி போலீசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.
முன்பாகவே தூத்துக்குடி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அவர்களுக்கு உடல் ரீதியான பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது. மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி முன்பாக ஆஜர்படுத்த படுவார்கள். அதனைத் தொடர்ந்து நீதிபதி உத்தரவின் அடிப்படையில் அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று தெரிகின்றது.