தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இதற்கு மத்தியில் வருமான வரித்துறையினர் அரசியல் கட்சிகளின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை நீலாங்கரையில் உள்ள திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மகள் செந்தாமரை மருமகன் சபரீசன் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திமுக வேட்பாளருக்கு சபரீசன் வீட்டில் இருந்துதான் பணம் தருவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
மேலும் செந்தில் பாலாஜியின் இல்லத்திலும் ஐடி ரெய்டு நடத்தப்பட்டது. இந்த ஐடி ரெய்டானது ஸ்டாலினின் மகள் இல்லம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் 12 மணி நேரத்திற்கு மேலாக நீடித்து நடத்தப்பட்டது. இந்நிலையில் இந்த சோதனையில் எதுவுமே சிக்காததால் அதிகாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.