Categories
தேசிய செய்திகள்

12 மணி நேரம்… ஏழு பேர் மர்மமான முறையில் மரணம்… காரணம் என்ன?…!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஏழு பேர் மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. கொரோனா அச்சுறுத்தலால் அம்மாநிலம் முழுவதும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் பருவமழை, வெள்ளம், இடி, மின்னல் போன்றவற்றால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் நகரில் கடந்த 12 மணி நேரத்தில் மட்டும் ஏழு பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். ஆனால் அவர்கள் திடீரென உயிரிழந்ததற்கான காரணம் என்னவென்று தற்போது வரை தெரியவில்லை. இதனைப் பற்றி அறிந்த முதல் மந்திரி 7 பேர் மரணம் அடைந்தது குறித்து விசாரணை உடனடியாக மேற்கொள்ளும் படி உத்தரவிட்டுள்ளார்.

 

Categories

Tech |