மாம்பழம் விற்ற பெண்ணிடம் இருந்து பன்னிரண்டு மாம்பழங்களை 1.2 லட்சத்திற்கு தொழிலதிபர் வாங்கியுள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலம், ஜாம்ஷெட்பூரை சேர்ந்த, துள்சி குமாரி என்பவர் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தை ஸ்ரீமல் குமார். இவர் சாலையோரத்தில் பழங்களை விற்று பிழைப்பு நடத்தி வருகிறார். தற்போது ஊரடங்கு காரணமாக அனைத்து இடங்களிலும் பள்ளிகள் திறக்கப் படாமல் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்பு நடைபெற்றுவருகின்றது. துள்சி குமாரியிடம் செல்போன் இல்லாத காரணத்தினால் அவர் தனது தந்தையுடன் சேர்ந்து பழங்களை விற்பனை செய்து வருகிறார்.
இதை அறிந்த தொழிலதிபர் ஒருவர் துள்சி குமாரியை தேடி கண்டுபிடித்து, அவரிடம் இருந்து 12 மாம்பழங்களை வாங்கி கொண்டு ஒரு மாதத்திற்கு பத்தாயிரம் வீதம் 1.2 லட்சத்தை வழங்கியுள்ளார். அந்த பணத்தை வைத்து செல்போன் வாங்கி ஆன்லைனில் தொடர்ந்து படிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். இது மட்டுமில்லாமல் ஒரு ஆண்டுக்கு தேவையான இன்டர்நெட் கட்டணத்தையும், துள்சி குமாரிக்கு அந்த தொழிலதிபர் வழங்கியுள்ளார். இந்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.