Categories
மாநில செய்திகள்

12 மாவட்டங்களில்…. அடுத்த 2 மணி நேரத்தில்…. மக்களே ரெடியா…!!!!

தமிழகத்தில் கடந்த மாதம் வடகிழக்கு பருவமழையின் காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் நல்ல மழை வெளுத்து வாங்கியது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வழிந்தன. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளித்தது. மக்களுடைய இயல்பு வாழ்க்கை முடங்கியது. இதனைத்தொடர்ந்து இந்த மாதத்தின் தொடக்கத்திலிருந்தே மழையின் அளவு குறைந்து பனிமூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

இந்த நிலையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரத்தில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |