கேரளா மாநிலத்தில் உள்ள 12 மாவட்டங்களில் வருகின்ற 31ம் தேதி வரை கன மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
கேரளா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையால் அங்கு பெரும்பாலான மாவட்டங்களில் வவெள்ளக்காடாக சூழ்ந்துள்ளது . இந்த தொடர் மழையால் முக்கியமான அணைகளில் நீர்மட்டம் அதிகமாக உயர்ந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் மழை பாதிப்பு மற்றும் நிலச்சரிவு காரணமாக இடுக்கு மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் தென்மேற்கு அரபிக் கடலில் புதிய புயல் உருவாகி உள்ளது. இந்தப் புயல் மேற்கு திசையை நோக்கி நகர்ந்து தீவிரமடைந்து வருவதால் 31-ஆம் தேதி வரை கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் வருகின்ற 31-ஆம் தேதி வரை திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா பத்தனம்திட்டா, கோட்டயம், திருச்சூர் மற்றும் எர்ணாகுளம் ஆகிய 12 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் மேலும் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று எச்சரித்துள்ளது. இதனையடுத்து 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.