கேரளாவில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிக அதிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி திருவனந்தபுரம் மற்றும் கொல்லம் மாவட்டங்களை தவிர மற்ற 12 மாவட்டங்களுக்கும் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனால் அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மலைப்பாங்கான பகுதி களுக்கும் கடலலை அதிகமுள்ள கடலோரப் பகுதிகளுக்கும் மக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட ஐந்து நாட்களுக்கு முன்னதாக மே 27-ஆம் தேதி முதல் தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
Categories