அந்தமான் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அக்டோபர்-5 ம் தேதி அறிவித்திருந்தது.இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பில் அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியானது நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வலுப்பெறும் என அறிவித்துள்ளது. எனவே சேலம், நாமக்கல், கரூர், கள்ளக்குறிச்சி, கடலூர் ,திருச்சி, பெரம்பலூர், தஞ்சை, புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் தெரிவித்துள்ளது.