Categories
மாநில செய்திகள்

14 மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகள் விடுமுறை…. எந்தெந்த மாவட்டம் தெரியுமா….? இதோ லிஸ்ட்…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்துவருகிறது. இதனால் தொடர்ந்து மழை பொழிவானது கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உட்பட 15 மாவட்டங்களில் அதீத கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகின்றது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடுத்தடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி கனமழை காரணமாக இன்று 14 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சாவூர், ராணிப்பேட்டை, வேலூர். விழுப்புரம், அரியலூர், கடலூர், திருவண்ணாமலை  ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகள் செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |