சென்னையில் கடல் திடீரென்று உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் கடல் சுமார் 12 மீட்டர் வரை உள்ளே சென்றதால் மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடல் உள்வாங்கும் சம்பவம் நடைபெறுவது வழக்கம். இதுபோல் கடல் உள்வாங்கும் பொழுது சுனாமி போன்ற இயற்கைப் பேரழிவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. அந்த வகையில் தமிழகத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியால் பலர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் சென்னையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மெரினா கடற்கரை, பட்டினம்பாக்கம், பெசன் நகர், காசிமேடு கடல் பகுதிகள் திடீரென்று உள்வாங்கியது. சுமார் 10 முதல் 12 மீட்டர் வரை உள்வாங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட.து நேற்று காலையில் கடற்கரையோரம் நடைபயிற்சியில் ஈடுபட்டவர்கள் இதைப்பார்த்து அச்சம் அடைந்தனர். பின்னர் சிறிது நேரத்திற்குப் பிறகு கடல் இயல்பு நிலைமைக்கு திரும்பியது.