ஹாரி பாட்டர் படத்தை பற்றி நாம் அனைவரும் தெரிந்தது. உலகம் முழுக்க இந்த படத்தை பற்றி கேள்விப்படாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால் இந்த படத்தில் ஒரு சுவாரஸ்யமான உண்மை என்னவென்றால் JK பௌலிங்ஸ் என்பவர் இந்த கதையை உருவாக்கினார். முதன் முதலில் அவர் இந்த கதையை புத்தகமாக வெளியிட வேண்டும் என்று கூறியபோது ஏராளமான பப்ளிஷர்கள் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. எதற்காக இதை ஏற்றுக் கொள்ளவில்லை என்று JK பௌலிங்ஸ் கேட்டபோது ஹாரிபாட்டர் மிகவும் பெரிய கதை, மிகவும் பெரிதாகவும் மிக பழமையானதாகவும் இருக்கிறது.
இதனால் மக்களுக்கு கண்டிப்பாக இது பிடிக்க போவதில்லை என்று கூறினார்கள். ஒரு தடவை அல்லது இரண்டு தடவை அல்லாமல் 12 தடவை இந்த கதையை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளார்கள். இந்நிலையில் இதையும் தாண்டி அவர் அந்த ஹாரிபாட்டர் கதையை முதல்தடவையாக பப்ளிஷ் செய்தபோது 120 மில்லியன் புத்தகங்கள் விற்பனையானது. இன்றுவரையும் இந்த புத்தகம் நல்ல விற்பனையில் உள்ளது. அதன்பின்னர் ஹாரிபாட்டர் படமும் கிட்டத்தட்ட ரூ.60,000 கோடிக்கு ஓடியது. இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் எந்தவொரு விஷயத்திலும் நமக்கு பல சோதனைகள் வந்தாலும் அதையும் தாண்டி நாம் போனால் தான் நாம் நினைத்த காரியத்தை அடைய முடியும்.